ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளரும், வேட்பாளருமான எஸ்.ஆனந்தகுமார் இன்றும் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்.

வெவில்ல பகுதிக்கு சென்ற எஸ்.ஆனந்தகுமாருக்கு மக்கள் பெருமளவிலான ஆதரவை வழங்கியிருந்தனர்.

இரத்தினபுரி தமிழர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்க விரைவில் தீர்வை பெற்றுகொடுக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் இதன்போது உறுதியளித்திருந்தார்.

கவனீபாரற்ற சமூகமாக வாழ்ந்து வரும் இரத்தினபுரி தமிழர்களுக்கு தலைமைத்துவத்தை வழங்கி, எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் இரத்தினபுரி தமிழர்களை ஏனைய சமூகங்களுக்கு நிகராக வாழ வைப்பதே தனது ஒரே எதிர்பார்ப்பு எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு இலங்கைக்கு வருகைத் தந்த நாள் முதல் இன்று வரை அதே நிலையிலேயே வாழ்ந்து வருவதாகவும், சிறந்ததொரு தமிழ் தலைமைத்துவம் இல்லாமையே அதற்கான காரணம் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

தான் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை எடுக்க நாள் முதல் இரத்தினபுரி தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காக மாத்திரமே முன்னின்று உழைப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

கல்வி, தொழில்வாய்ப்பு, காணி உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் தனது பாராளுமன்ற காலப் பகுதியில் முன்னெடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளரும், வேட்பாளருமான எஸ்.ஆனந்தகுமார் தெரிவிக்கின்றார்.

இதேவேளை, வேவல்வத்தை, இறக்குவானை உள்ளிட்ட பகுதிகளுக்கு நேற்றைய தினம் சென்ற எஸ்.ஆனந்தகுமார் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.