ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி தமிழ் அமைப்பாளரும் வேட்பாளருமான எஸ்.ஆனந்தகுமார் இரத்தினபுரியின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று தனது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார்.

இரத்தினபுரி வேவல்வத்தை பகுதி மக்களை சந்தித்த அவர், அந்த பகுதி மக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.

தமது பகுதியிலுள்ள தோட்டங்கள் மூடப்பட்டுள்ளமையினால், தமது தொழில்வாய்ப்புக்கள் இழக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

அத்துடன், தமக்கான காணி மற்றும் வீட்டு உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இதற்கு பதிலளித்த எஸ்.ஆனந்தகுமார், தான் பாராளுமன்றத்திற்கு சென்று இந்த பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுகொடுப்பதாக உறுதியளித்தார்.

செயலிழந்துள்ள தேயிலை தோட்டங்களை மக்களுக்கு வழங்கி சுயதொழிலை ஊக்குவிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த உறுதிமொழி தமக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்த பிரதேச மக்கள் தெரிவித்திருந்தனர்.