2015 ஆகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்திலுள்ள 13 தேர்தல் தொகுதிகளில் 12 இல் ஐக்கிய தேசியக்கட்சியே வெற்றிபெற்றது. ‘வெற்றிலை’ சின்னத்தில் களமிறங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் உடுதும்பர தேர்தல் தொகுதியில் மாத்திரமே முன்னிலை வகிக்கக்கூடியதாக இருந்தது.

இதன்படி ஐக்கிய தேசியக்கட்சி 13 தொகுதிகளிலும்  4 லட்சத்து 40 ஆயிரத்து 761 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களுடன் கண்டி மாவட்டத்தைக் கைப்பற்றியது. 3 லட்சத்து 9 ஆயிரத்து 152 வாக்குகளைப்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 5 ஆசனங்கள் கிடைத்தன.

எனினும், 2019 நவம்பர் 16 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித்தேர்தலின்போது இந்நிலைமை தலைகீழாக மாறியது. 7 தேர்தல் தொகுதிகளில் மொட்டு மலர்ந்து, 54 ஆயிரத்து 147 வாக்கு வித்தியாசத்தில் கண்டி மாவட்டத்தை மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றியது. ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்சவுக்கு கண்டி மாவட்டத்திலுள்ள பெரும்பான்மையான மக்கள் அமோக ஆதரவை வழங்கியிருந்தனர்.

2015 பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் – கண்டி மாவட்டம்.

இந்நிலையில் எதிர்வரும் ஆகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் கண்டி மாவட்ட தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையும் என்பதே பலரின் கேள்வியாக இருக்கின்றது.

ஐக்கிய தேசியக்கட்சி இரண்டாக பிளவுபட்டு சஜித் தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி உருவாகியிருந்தாலும் 8 ஆவது பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த ஐக்கிய தேசியக்கட்சியின் கண்டி மாவட்ட எம்.பிக்கள் சஜித் பக்கமே நிற்கின்றனர். ஐக்கிய தேசியக்கட்சியில் போட்டியிடும் நவீன் திஸாநாயக்கவின் தம்பியான மயந்த திஸாநாயக்கவும் தொலைபேசி சின்னத்திலேயே போட்டியிடுகின்றார்.

கண்டி மாவட்டத்தில் 12 ஆசனங்களை இலக்கு வைத்து அரசியல் கட்சிகளில் இருந்து 255 பேரும், சுயேட்சைக்குழுக்களில் இருந்து 180 பேருமாக மொத்தம் 435 பேர் போட்டியிடுகின்றனர். 11 லட்சத்து 29 ஆயிரத்து 100 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.

2015 இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது கண்டி மாவட்டத்தில் நான்கு தேர்தல் தொகுதிகளிலும் பதிவுசெய்யப்பட்ட, அளிக்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட, செல்லுபடியான வாக்கு விபரமும், 2019 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரம் வாக்காளர்களின் எண்ணிக்கையும் வருமாறு,

1.கலகெதர தேர்தல் தொகுதி

பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 54,214
அளிக்கப்பட்ட வாக்குகள் – 39,933
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 1,558
செல்லுபடியான வாக்குகள் – 38,375
2019 இடாப்பின் பிரகாரம் வாக்காளர்களின் எண்ணிக்கை – 56,213
(இத்தொகுதியில் 2015 பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியும், 2019 ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் வெற்றிபெற்றன.)

2.ஹாரிஸ்பத்துவ தேர்தல் தொகுதி

பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 157,463
அளிக்கப்பட்ட வாக்குகள் – 117,748
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 5,126
செல்லுபடியான வாக்குகள் – 112,622
2019 இடாப்பின் பிரகாரம் வாக்காளர்களின் எண்ணிக்கை – 170,166
(இத்தொகுதியில் 2015 பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியும், 2019 ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் வெற்றிபெற்றன.)

3.பாத்ததும்பர தேர்தல் தொகுதி

பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 85,375
அளிக்கப்பட்ட வாக்குகள் – 63,195
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 3,406
செல்லுபடியான வாக்குகள் – 59,789
2019 இடாப்பின் பிரகாரம் வாக்காளர்களின் எண்ணிக்கை – 91,725

(இத்தொகுதியில் 2015 பொதுத்தேர்தலிலும், 2019 நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் ஐ.தே.கவே. இத்தொகுதியில் வெற்றிபெற்றது. ஜனாதிபதித் தேர்தலின்போது ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலேயே ஜனநாயக தேசிய முன்னணி அன்னம் சின்னத்தில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது)

4.உடதும்பர தேர்தல் தொகுதி

பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 58,637
அளிக்கப்பட்ட வாக்குகள் – 45,082
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 2,368
செல்லுபடியான வாக்குகள் – 42,714
2019 இடாப்பின் பிரகாரம் வாக்காளர்களின் எண்ணிக்கை – 61,991
(இத்தொகுதியில் 2015 பொதுத்தேர்தலிலும், 2019 ஜனாதிபதி தேர்தலிலும் ராஜபக்ச தரப்புகளே வெற்றிபெற்றன.)

5.தெல்தெனிய தேர்தல் தொகுதி

பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 47,685
அளிக்கப்பட்ட வாக்குகள் – 35,807
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 2,195
செல்லுபடியான வாக்குகள் – 33,612
2019 இடாப்பின் பிரகாரம் வாக்காளர்களின் எண்ணிக்கை – 50,949
(இத்தொகுதியில் 2015 பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியும், 2019 ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் வெற்றிபெற்றன.)

2019 ஜனாதிபதி தேர்தல் முடிவுகள், கண்டி மாவட்டம்

6.குண்டசாலை தேர்தல் தொகுதி

பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 94,870
அளிக்கப்பட்ட வாக்குகள் – 70,865
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 2,695
செல்லுபடியான வாக்குகள் – 68,170
2019 இடாப்பின் பிரகாரம் வாக்காளர்களின் எண்ணிக்கை – 104,598
(இத்தொகுதியில் 2015 பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியும், 2019 ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் வெற்றிபெற்றன.)

7.ஹேவாஹெட்ட தேர்தல் தொகுதி

பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 69,243
அளிக்கப்பட்ட வாக்குகள் – 50,919
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 2,903
செல்லுபடியான வாக்குகள் – 48,016
2019 இடாப்பின் பிரகாரம் வாக்காளர்களின் எண்ணிக்கை – 73,898
(இத்தொகுதியில் 2015 பொதுத்தேர்தலில் 2019 ஜனாதிபதித் தேர்தலிலும் ஐக்கிய தேசியக்கட்சியே வெற்றிபெற்றது.)

8.செங்கடகல தேர்தல் தொகுதி

பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 81,149
அளிக்கப்பட்ட வாக்குகள் – 59,474
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 1,604
செல்லுபடியான வாக்குகள் – 57,870
2019 இடாப்பின் பிரகாரம் வாக்காளர்களின் எண்ணிக்கை – 87,718

((இத்தொகுதியில் 2015 பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியும், 2019 ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் வெற்றிபெற்றன.)

9.மகநுவர தேர்தல் தொகுதி

பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 40,020
அளிக்கப்பட்ட வாக்குகள் – 29,282
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 721
செல்லுபடியான வாக்குகள் – 28,561
2019 இடாப்பின் பிரகாரம் வாக்காளர்களின் எண்ணிக்கை – 42,330
(இத்தொகுதியில் 2015 பொதுத்தேர்தலில் 2019 ஜனாதிபதித் தேர்தலிலும் ஐக்கிய தேசியக்கட்சியே வெற்றிபெற்றது.)

10. யட்டிநுவர தேர்தல் தொகுதி

பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 80,420
அளிக்கப்பட்ட வாக்குகள் – 59,753
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 2,067
செல்லுபடியான வாக்குகள் – 57,686
2019 இடாப்பின் பிரகாரம் வாக்காளர்களின் எண்ணிக்கை – 86,599
((இத்தொகுதியில் 2015 பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியும், 2019 ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் வெற்றிபெற்றன.)

11. உடுநுவர தேர்தல் தொகுதி

பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 82,298
அளிக்கப்பட்ட வாக்குகள் – 61,722
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 2,365
செல்லுபடியான வாக்குகள் – 59,357
2019 இடாப்பின் பிரகாரம் வாக்காளர்களின் எண்ணிக்கை – 89,085
(இத்தொகுதியில் 2015 பொதுத்தேர்தலில் 2019 ஜனாதிபதித் தேர்தலிலும் ஐக்கிய தேசியக்கட்சியே வெற்றிபெற்றது.)

12. கம்பளை தேர்தல் தொகுதி

பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 102,219
அளிக்கப்பட்ட வாக்குகள் – 77,505
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 4,204
செல்லுபடியான வாக்குகள் – 73,301
2019 இடாப்பின் பிரகாரம் வாக்காளர்களின் எண்ணிக்கை – 114,415
(இத்தொகுதியில் 2015 பொதுத்தேர்தலில் 2019 ஜனாதிபதித் தேர்தலிலும் ஐக்கிய தேசியக்கட்சியே வெற்றிபெற்றது.)

13. நாவலப்பிட்டிய தேர்தல் தொகுதி

பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 95,567
அளிக்கப்பட்ட வாக்குகள் – 72,200
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 5,101
செல்லுபடியான வாக்குகள் – 67,099
2019 இடாப்பின் பிரகாரம் வாக்காளர்களின் எண்ணிக்கை – 102,393
(இத்தொகுதியில் 2015 பொதுத்தேர்தலில் 2019 ஜனாதிபதித் தேர்தலிலும் ஐக்கிய தேசியக்கட்சியே வெற்றிபெற்றது.)

2019 ஜனாதிபதி தேர்தலின்போது கண்டி மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 11 ஆயிரத்து 860 ஆக இருந்தபோதிலும் 9 லட்சத்து 43 ஆயிரத்து 895 பேரே வாக்களித்தனர். 9 ஆயிரத்து 20 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 965 பேர் வாக்குரிமையை பயன்படுத்தவில்லை.

அத்துடன், 2015 பொதுத்தேர்தலின்போது 37 ஆயிரத்து 65 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. 79.13 வீதமானோரே வாக்களித்திருந்தனர்.

அதேவேளை, கண்டி மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் என்பது 15 ஆண்டுகளுக்கு பின்னரே 2015 இல் வென்றெடுக்கப்பட்டது. அதனை தக்கவைத்துக்கொள்ளவேண்டியது தமிழ் மக்களின் கடமையாகும். அதற்கு தமிழ் பேசும் முஸ்லிம் சகோதரர்களும் ஒத்துழைப்பு நல்கவேண்டும் என புத்திஜீவிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கண்டி மாவட்டத்தில் மூவின மக்களும் வாழ்கின்றனர். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 9 சிங்கள உறுப்பினர்களும், 2 முஸ்லிம்களும், ஒரு தமிழரும் தெரிவுசெய்யப்பட்டனர். மூன்று முஸ்லிம் உறுப்பினர்களையும், ஒரு தமிழ் உறுப்பினரையும் தக்கவைத்துக்கொள்வதற்கான தமிழ் பேசும் மக்களின் வாக்கு வங்கி கண்டி மாவட்டத்தில் உள்ளது.

ஆர்.சனத்

கண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் 1947 -2015

https://leadnews7.com/2020/05/09/kandy-district-parliamentary-representation-representation-z%c9%99n-%cb%8crepri%cb%8czen%cb%88tash%c9%99n-translations-of-representation-nounfrequency-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5/