“1967 இல் எனது தந்தை உயிரிழக்கும்போது ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையார் ரஷ்யாவில் இருந்தார்.இதனால் பிரிதொரு நாளிலேயே அவர் எங்கள் வீட்டுக்கு வருகைதந்திருந்தார்.

பெலியத்த தொகுதியில் களமிறங்குவதற்கு மகன் ஒருவரை அனுப்புமாறு எனது தாயிடம் அவர் கேட்டிருந்தார். இதன்படி அண்ணன் சமல் ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர் முடியாது எனக் கூறிவிட்டு, எனது பெயரை பரிந்தரைந்தார்.

இதனையடுத்து நான் வேட்புமனு குழுவுக்கு நேர்முகத்தேர்வுக்கு சென்றிருந்தேன். பண்டாரநாயக்க அம்மையார், மைத்திரிபால சேனாநாயக்க உட்பட முக்கிய அரசியல் பிரமுகர்கள் அக்குழுவில் இருந்தனர்.

“இன்னும் மீசைக்கூட முளைக்கவில்லை. எப்படி தேர்தலை எதிர்கொள்வீர்கள், வாய்ப்பை சமலுக்கு வழங்குமாறு” அறிவுரை கூறினர். அவ்வாறு கூறியவர்களிடம் எனது தரப்பு நியாயத்தை முன்வைத்தேன்.

ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையார் சிரித்தார். எனது அம்மாவுடன் கலந்துரையாடி முடிவொன்றை எடுப்பதாகக்கூறி என்னை அனுப்பிவைத்தனர்.இறுதியில் வாய்ப்பு கிடைத்தது. தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றேன்.”

இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்சவின் 50 வருடகால அரசியல் பயணம் தொடர்பில் சுயாதீன தொலைக்காட்சியில் நடைபெற்ற அனுபவ பகிர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே மேற்படி தகவலையும் வெளியிட்டார்.

அவரின் நேர்காணல் வருமாறு,

ජනහදවිල පිපි සියපත පනස් වසක් පුරා මහා මෙහෙවරක අභිමානයට පිදෙන උත්තම ප්‍රණාමය

ITN Sri Lanka – ජනහදවිල පිපි සියපත පනස් වසක් පුරා මහා මෙහෙවරක අභිමානයට පිදෙන උත්තම ප්‍රණාමය#ITN #ITNSriLanka #MahindaRajapaksa

Posted by ITN Sri Lanka on Sunday, June 7, 2020

இலங்கையின் 5 ஆவது ஜனாதிபதி தேர்தல்