இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவையடுத்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் இன்று (27) காலை அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உயர்பீடக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்சவை இன்று சந்தித்து, இ.தொ.கா. பிரதிநிதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

அதேவேளை, இ.தொ.காவின் தலைமைப்பதவிக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பில் பொதுத்தேர்தலின் பின்னரே தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.