இலங்கையில் மேலும் 16 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 1,182 ஆக அதிகரித்துள்ளது. இன்று இதுவரையில் 41 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானவர்களில் குவைத்தில் இருந்து வந்து, கொரோனா தடுப்பு முகாமில் இருந்தவர்களாவர்.

வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைபெற்று வருபவர்களில் மேலும் 21 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர். இதன்படி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 695 ஆக அதிகரித்துள்ளது.

477 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. 10 பேர் உயிரிழந்துள்ளனர்.