இலங்கையில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதன்படி வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 188 ஆக உயர்வடைந்துள்ளது.

இவர்களில் ஆறுபேர் பலியாகியுள்ளனர். அத்துடன்,42 பேர் குணமடைந்துள்ளனர்.

140 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்றுவருகின்றனர். வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 228 பேர் மருத்துவ கண்காணிப்பில் இருந்துவருகின்றனர்.