உலக நாடுகள் முழுவதையும் உலுக்கி எடுத்துவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 879 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவியுள்ளது.

இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. நாளாந்த உயிரிழப்பு எண்ணிக்கை 18 வீதமாகியுள்ளது.

உலகம் முழுவதும் இதுவரை 6இலட்சத்து63 ஆயிரத்து 740 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

மேலும், 4 இலட்சத்து 98 ஆயிரத்து 678 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு இலட்சத்து 42 ஆயிரத்து 483 பேர் குணமடைந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 115 ஆக உயர்வடைந்துள்ளது.

199 பேர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கின்றனர். ஒன்பது பேர் குணமடைந்துள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார்.