உலகமெங்கும் மிக வேகமாக பரவும் கொரோனா வைரஸ் காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டி அடுத்த ஆண்டு நடத்த சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் தோமஸ் பேக் ஒப்புதல் அளித்துள்ளார்.

2020 ஜூலை மாதம் 24ஆம் திகதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஆரம்பமாக இருந்த ஒலிம்பிக் போட்டிகள் 2021 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கபட்டுள்ளதாகவும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஒலிம்பிக் கமிட்டி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவின் பரிந்துரையை ஏற்று ஓராண்டு ஒத்திவைக்க ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது.

ஏற்கனவே ஐபிஎல் உட்பட அனைத்து விளையாட்டு போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டும், இரத்து செய்யப்பட்டும் வரும் நிலையில் தற்போது ஒலிம்பிக் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது