இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை முதல் நாளைமறுதினம் வியாழக்கிழமை வரை மூன்று நாட்களுக்கு அரசு ‘விசேட பொது விடுமுறை’ வழங்கியுள்ளது.

இருப்பினும் அத்தியாவசிய சேவைகளான சுகாதாரம், வங்கி, போக்குவரத்து என்பவற்றுடன் மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் ஆகியவற்றின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும், ஏனைய அரச நிறுவனங்களுக்கே விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை தனியார் துறைகளுக்கும் பொருந்தும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.