பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு நவசமசமாஜக் கட்சி தீர்மானித்துள்ளது.

இதன்படி அக்கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன களுத்துறை மாவட்டத்திலும், மத்திய குழுசெயற்குழு உறுப்பினர்களான திருநாவுகரசு யாழ். மாவட்டத்திலும், மகேந்திரன் வன்னியிலும் போட்டியிடுகின்றனர்.

வேட்புமனுவிலும் இவர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

“களுத்துறை மாவட்டத்திலும் மலையகத் தமிழர்கள் வாழ்கின்றனர். அவர்களுக்காக குரல் எழுப்புவதற்கு எவரும் இல்லை. இது உட்பட மேலும் சில காரணிகளை கருத்திற்கொண்டே இங்கு போட்டியிடும் முடிவை எடுத்தேன்.” – என்று விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.