உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா வைரஸ் தாக்கம் பரவி வருவதை அடுத்து, மருத்துவ அவசர நிலையை பிரகடனம் செய்வதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியா உட்பட உலகம் முழுவதும் 15க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 8000த்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான தடுப்பு மருந்தை தயாரிப்பதில் உலக சுகாதார அமைப்பு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஜப்பான், வியட்நாம், ஜெர்மனி ஆகிய நாடுகளில், ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு கொரோனா வைரஸ் எளிதில் பரவி வருவதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உலகம் முழுவதும் மருத்துவ அவசர நிலையை பிரகடனம் செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து, கொரோனோ பாதிப்பை தடுக்க வேண்டும் எனவும் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி உள்ளது.