இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இந்திய வருகையை கண்டித்து டில்லியில் ம.தி.மு.க. கட்சியினருடன் போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற கோட்டாபய ராஜபக்சவுக்கு வாழ்த்து தெரிவித்த பாரத பிரதமர் மோடி, இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பை ஏற்று 3 நாட்கள் அரசு முறைப்பயணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று மாலை (28) இந்தியா வருகை தந்தார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து டில்லியில், மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

டில்லி ஜந்தர்மந்தர் பகுதியில் திரண்ட மதிமுகவினர் கோட்டாபய ராஜபக்ச இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோஷங்களை எழுப்பினர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வைகோவை டில்லி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.