மலேசியாவில் டிசம்பர் 2 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள 21 ஆவது ஆசிய மெய்வல்லுனர் போட்டியில் இலங்கை சார்பில் கலந்துகொள்வதற்காக நாளை (28) மலேசியா நோக்கி பயணமாகிறார் மலையக விளையாட்டு வீரரான துரைசாமி விஜிந்த்.

நீளம் பாய்தல், உயரம் பாய்தல், சுற்றி எறிதல் , 5000 மீற்றர் வேக நடை ஆகிய நான்கு போட்டிகளில் இவர் பங்கேற்கிறார்.

போட்டிகள் அனைத்தும் மலேசியாவின் சரவாக் விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகின்றன.