ஜனாதிபதி தேர்தலில் வெற்றியை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு, வாழ்த்து தெரிவித்துள்ளார் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச.

அத்துடன்,  தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு – தோல்விக்கு பொறுப்பேற்று ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவர் பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதித் தலைவர் பதவியை துறந்தாலும் தனது அரசியல் பயணம் தொடரும் என அறிவித்துள்ள அவர், நீதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.