இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்காக அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் ஒரு இலட்சத்து 35 ஆயிரத்து 452 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பு நேற்று (16) காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெற்றது.

ஒரு கோடி 59 இலட்சத்து 92 ஆயிரத்து 96 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

எனினும், ஒரு கோடியே 33 இலட்சத்து 87 ஆயிரத்து 951 பேரே வாக்குரிமையை பயன்படுத்தினர்.

இவற்றில் உரிய வகையில் அளிக்கப்படாத ஒரு இலட்சத்து 35 ஆயிரத்து 499 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. இதன்படி செல்லுபடியான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை ஒருகோடியே 32 இலட்சத்து 52 ஆயிரத்து 499 வாக்குகளாகும்.

பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை வருமாறு,

1.கோட்டாபய ராஜபக்ச – 6,924,255 – 52.25%

2. சஜித் பிரேமதாச – 5,564,239- 41.99%

3.அநுரகுமார திஸாநாயக்க –418,553- 3.16%

அதேவேளை, வாக்களிப்பு வீதம் 83.72 ஆக அமைந்துள்ளது.
இலங்கை ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் அதிகூடிய வாக்குபதிவு இடம்பெற்ற தேர்தலாகவும் இத்தேர்தல் அமைந்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலும், வாக்களிப்பு வீதமும்
1.1982 – 81.06%