இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ச நாளை (18) மாலை அநுராதபுரத்தில் பதவியேற்கவுள்ளார் என தெரியவருகின்றது.

அநுராதபுரம் ருவன்வெலி மகா தூபி முன்பாகவே பதவியேற்பு நிகழ்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பதவியேற்பு நிகழ்வுக்காக அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் வெற்றிபெற்றுள்ளதால், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஐக்கிய தேசியக்கட்சியின் விசேட கூட்டமொன்று இன்று மாலை நடைபெறவுள்ளது எனவும் அறியமுடிகின்றது.