இலங்கை ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் மக்கள் அதிக ஆர்வத்துடன் வாக்களித்த தேர்தலாக இத்தேர்தல் பார்க்கப்படுகின்றது. வாக்களிப்பு வீதம் 80 சதவீதத்தையும் தாண்டியுள்ளது.

நாடளாவிய ரீதியில் பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்காளர்களில், வாக்களித்தவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக்கொண்டே வாக்களிப்பு வீதம் கணிக்கப்படுகின்றது.

இதன்படி இம்முறை 80 சதவீத வாக்குபதிவு தேசிய மட்டத்தில் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.

1982 ஆம் ஆண்டில்தான் இலங்கையில் முதலாவது ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. அன்றுமுதல் இற்றைவரை நடைபெற்றுள்ள ஜனாதிபதி தேர்தல்களில் வாக்களிப்பு வீதம் எவ்வாறு அமைந்தது என்ற விபரத்தை பார்ப்போம்.

1.1982 –  81.06%  

2.1988 –  55.32%

3.1994 –  70.47%

4.1999 –  73.31%

5.2005 –  73.73%

6.2010 –  74.5%

7.2015-   81.52%

8.2019 – 80 % (அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.)

1982 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் 80 வீதத்துக்கும் மேல் வாக்கு பதிவு இடம்பெற்றது. இந்த இரண்டு முறையும் ஐக்கிய தேசியக்கட்சியே வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.