ஐக்கிய தேசியக்கட்சி தலைமையில் உதயமான புதிய ஜனநாயக முன்னணி என்ற அரசியல் கூட்டணிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை நாளை (01) கைச்சாத்திடப்படவுள்ளது.
இதற்கான நிகழ்வு காலை 8.30 மணிக்கு கொழும்பிலுள்ள தாஜ்சமுத்ரா ஹோட்டலில் நடைபெறும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய முன்னணியில் தற்போது அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகள், சிவில் அமைப்புகள் உட்பட மேலும் சில கட்சிகளின் சார்பில் அவற்றின் பிரதிநிதிகள் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவார்கள்.
1.ஜனநாயக மக்கள் முன்னணி.
2.மலையக மக்கள் முண்ணி.
3.தொழிலாளர் தேசிய முன்னணி.
4.ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.
5.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்.
6.ஜாதிக ஹெல உறுமய.
7.நவசமசமாஜக் கட்சி.
உட்பட மேலும் சில கட்சிகளும், சிவில் அமைப்புகளுமே புதிய கூட்டணியில் அங்கம் வகிக்கவுள்ளன.