இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் சர்ச்சையைக் கிளப்பும் வகையில் உரையாற்றிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் பிரசாரத்தின் போது,   ராஜீவ் காந்தியின் கொலையை நியாயப்படுத்தும் வகையில் சீமான் உரையாற்றினார் எனக் கூறப்படுகின்றது.

இதனையடுத்து சீமானின் உரை குறித்து காங்கிரஸ் கட்சி அளித்த முறைப்பாட்டின் பேரில் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வன்முறையை தூண்டும் வகையிலும், தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.