யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று முற்பகல் 10 மணிக்கு கொடியேற்றத் திருவிழாவுடன் வெகு விமர்சையாக ஆரம்பமாகவுள்ளது.

இன்று ஆரம்பமான மகோற்சவப் பெருவிழா 25 நாட்கள் தொடர்ந்து நடைபெறுவதுடன் முதலாம் திகதி தீர்த்த உற்சவத்துடன் இனிதே நிறைவு பெறும்.

ஆலயத்தின் பாதுகாப்பையும், ஆலயத்துக்குவரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முகமாக ஆலயத்தை சூழவுள்ள பாதைகள் பொதுப்போக்குவரத்துக்கு மூடப்பட்டு, வீதித்தடை போடப்பட்டுள்ளது. மாற்று வழி ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், ஆலய வளாகத்தில் நேற்று இராணுவத்தினரும், காவல்துறையினரும் இணைந்து விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அழகால் அலங்காரக் கந்தன் என்றும் இளமையால் குமரன் என்றும் அழைக்கப்படும் நல்லூர்க் கந்தனின் ஆலயம் யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட தொன்மை கொண்ட ஆலயமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.