கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜெயந்திநகர் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் தாயும் மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் வசித்து வந்த வீட்டிலிருந்தே இன்று காலை இரத்த வெள்ளத்தில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

விஷ்ணுகாந்தி வள்ளியம்மை (வயது 70) என்ற வயோதிபத் தாயாரும், அவரது மகனான விஷ்ணுகாந்தி லிங்கேஷ்வரன் (வயது 34) என்ற இளைஞருமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இருவரினதும் உடல்களில் வெட்டுக்காயங்கள் காணப்படுகின்றபடியால் அவர்கள் நேற்றிரவு அல்லது இன்று அதிகாலை படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சடலங்களைக் கிளிநொச்சி நீதிவான் நேரில் வந்து பார்வையிட்டார். அதன்பின்னர் சடலங்கள், பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

சம்பவம் தொடர்பான பூர்வாங்க விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸாரும் கிளிநொச்சி குற்றத் தடுப்புப் பிரிவினரும் முன்னெடுத்து வருகின்றனர்.