நான்கு வயது பெண் குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்து, கொலை செய்த முன்னாள் இராணுவ சிப்பாயை பொலிஸார் கைது செய்துள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

திருமுல்லைவாயல் பொலிஸ் நிலையத்தில் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், தன் நான்கு வயது குழந்தையை காணவில்லை என நேற்று இரவு 7:30 மணி அளவில் முறைப்பாடு செய்தார்.

இதன் அடிப்படையில் பொலிஸார் அந்தப் பெண்ணின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டு கழிப்பறையில் இருந்த கோணிப்பையில், குழந்தை கொலை செய்யப்பட்டு அடைத்து வைத்திருந்தது தெரிந்தது.

விசாரணையில் அந்த பெண்ணின் வீட்டிற்கு அருகே வசிக்கும் முன்னாள் இராணுவ வீரரான 60 வயதான மீனாட்சி சுந்தரம்,

நேற்று மாலை வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்து கொன்று, உடலை கோணிப்பையில் அடைத்து, கழிப்பறையில் வீசியது தெரிய வந்தது.

இதனையடுத்து திருமுல்லைவாயல் பொலிஸார், மீனாட்சி சுந்தரத்தை கைது செய்து விசாரித்து வருவதாக மேலும் அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.