சிறந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு, அரசியலமைப்பின் 18 ஆவது மற்றும் 19 ஆவது திருத்தச் சட்டங்கள் இல்லாமல் ஒழிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு – பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இன்று (23) நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி

சிறந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு, அரசியலமைப்பின் 18 ஆவது மற்றும் 19 ஆவது திருத்தச் சட்டங்கள் இல்லாமல் ஒழிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.கொழும்பு – பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இன்று (23) நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.www.leadnews7.com

Posted by Leadnews7 on Sunday, June 23, 2019

“அரசியலமைப்பின் 18 ஆவது மற்றும் 19 ஆவது திருத்தச் சட்டங்கள் இல்லாமல் ஒழிக்கப்படுவதே நாட்டுக்கு நன்மையைத் தரும்.

மகிந்த ராஜபக்சவினால் கொண்டு வரப்பட்ட 18 ஆவது திருத்தச்சட்டம் நாட்டில் மன்னராட்சியை உருவாக்கியது.

அதனை ஒழிப்பதற்காக 2015இல் கொண்டு வரப்பட்ட 19 ஆவது திருத்தச்சட்டம், நாட்டில் உறுதியற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.

19 ஆவது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கா விட்டால், கடந்த நான்கரை ஆண்டுகளில் நாட்டுக்கு வெற்றி கிடைத்திருக்கும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் சஜித் பிரேமதாச உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.