லிப்ரா எனும் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது சமூக ஊடக நிறுவனமான  பேஸ்புக்.

குறுஞ்செய்தி அனுப்பவது எவ்வளவு சுலபமோ, அந்த அளவுக்கு பணத்தை சேமிப்பபது, அனுப்பவது மற்றும் செலவு செய்வதை இது சுலபமாக்கும். ஒரு ஸ்மார்ட்  போனும், இணைய வசதியும் இருந்தால் போதும் என்கிறது அந்த நிறுவனம்.

இந்த டிஜிட்டல் பணத்தின் பரிமாற்றத்துக்கு சிறிய அளவிலான கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கும் வங்கி கணக்கு இல்லாத 170 கோடி மக்கள் மற்றும்

அவர்கள் பணப் பரிமாற்றம் மேற்கொள்ள செய்யும் செலவுகள் ஆகியவை பற்றி இந்த திட்டம் பற்றிய அறிக்கையில் பேஸ்புக் விவரித்துள்ளது.