தெற்காசியாவிலேயே மிகவும் நீளமான, சயன நிலை புத்தர் சிலை கம்பளை நகரிலுள்ள, சாலியெல புராதன விகாரையில் அமைந்துள்ளது.

132 அடி நீளமும், 30 அடி அகலமும் கொண்ட குறித்த புத்தர் சிலையை நிர்மாணிப்பதற்கான பணிகள், 1994 ஆம் ஆண்டு, மே மாதம் 26 ஆம் திகதி ஆரம்பமாகி, 2001 ஆம் ஆண்டில் நிறைவுக்கு வந்தன.

இதையடுத்து 2001 மே, 08 ஆம் திகதி, அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில், கௌத புத்தரின் சிலை திறப்பு விழா பெருமெடுப்பில் நடைபெற்றது.

அடிக்கல் நடும் நிகழ்வு முன்னாள் ஜனாதிபதி அமரர். டி.பி. விஜேதுங்க (ஐக்கிய தேசியக்கட்சி) தலைமையில் நடைபெற்றது. எனினும், ஆட்சிமாற்றம் ஏற்பட்டதால் திறப்பு விழாவுக்கு சுதந்திரக்கட்சி தலைமை வகித்தது.

குறித்த சிலையை நிர்மாணிப்பதற்காக வர்த்தகர்களும், நலன் விரும்பிகளும் பெரும் உதவிகளை வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, இலங்கையில் முதன்முறையாக கம்பளையில்தான் கோப்பி பயிரும் பயிரிடப்பட்டது.கம்பளை நகரில் – சிங்ஹாபிட்டிய எனும் பகுதியிலேயே ஹன்ரி பேர்ட், ஜோர்ஜ் பேர்ட ஆகிய சகோதரர்களால் கோப்பி பயிரிடப்பட்டுள்ளது.