பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் அமிதாப்பச்சன், தற்போது நடித்து வரும் ‘சேரே’ படக்குழுவினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

ரூமி ஜாப்ரியின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சேரே’ என்ற இந்தி திரைப்படத்தில் அமிதாப் பச்சன் தற்போது நடித்து வருகிறார்.
‘சேரே’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பின் கடைசி காட்சி ஜூன் 16-ஆம் திகதி படமாக்கப்பட்டது. இந்நிலையில் ரசூல் பூக்குட்டி தனது சமூக வலைத்தள பக்கத்தில் அமிதாப் பச்சன் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
“நடிகர் அமிதாப் பச்சன்  இந்திய சினிமாவில் மற்றொரு வரலாற்றை பதிவு செய்துள்ளார்.
‘சேரே’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பின், கடைசி நாள் அவர் ஒரே ஷாட்டில் பதினான்கு நிமிட நீள காட்சியை நடித்தார், ஒட்டுமொத்த படக்குழுவினரும் எழுந்து நின்று கைதட்டினர்.
டியர் சார், சந்தேகமே இல்லாமல் நீங்கள் உலகில் சிறந்த மனிதர்களில் ஒருவர்’’ என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
‘கள்வனின் காதலி’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய தமிழ்வாணன் இயக்கத்தில் தமிழில் உருவாகும் ‘உயர்ந்த மனிதன்’ திரைப்படத்தில் நடிகர் அமிதாப் பச்சன் நடித்துவருகிறார். இந்த படத்தில் அமிதாப் பச்சனுடன் எஸ்ஜே சூர்யாவும் நடித்துவருகிறார்.