வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ரிலீஸ் திகதியில் மாற்றம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் அஜித் சட்டதரணியாக நடித்துள்ளார்.

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக்காக இப்படத்தை தயாரித்துள்ளார் போனி கபூர்.

இப்படம் தொடங்கும் முன்பே ஆகஸ்ட் 10ஆம் திகதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துள்ளதால் முன்கூட்டியே ஆகஸ்ட் 1ஆம் திகதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.