ராட்சசி என்ற புதிய படத்தை இயக்கி இருக்கும் புதுமுக இயக்குனர் சை.கௌதம்ராஜ், ஜோதிகா ஒரு நடிப்பு ராட்சசி என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

ஜோதிகா நடித்து, ‘ ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் புதுமுக இயக்குநர் சை.கௌதம்ராஜ் இயக்கத்தில் அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம்தான்  “ராட்சசி”.

டிகைகளுக்கு  முக்கியத்துவத்துடன் நல்ல கதைகளாகவும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஜோதிகா. அவரின் அடுத்த படமான ராட்சசி படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ மற்றும் ‘டிரைலர்’  சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

விரைவில் படம் திரைக்கும் வர இருக்கும் நிலையில் அதனை இயக்கியுள்ள இயக்குநர் சை.கௌதம்ராஜ் படத்தைப் பற்றிக் கூறுகையிலேயே ஜோதிகாவை புகழ்ந்து தள்ளியுள்ளார்.