காஜல் அகர்வால் தமிழில் நடித்துள்ள ‘பாரிஸ் பாரிஸ்’, ‘கோமாளி’ படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. அடுத்து கமல்ஹாசன் ஜோடியாக, ‘இந்தியன்-2’ படத்தில் நடித்து வருகிறார்.

இது குறித்து கருத்து வெளியிட்ட அவர்,

“ கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கலாமே என்று சிலர் கேட்கின்றனர். எனது சக நடிகைகள் அப்படி நடிக்கிறார்கள் என்பதற்காக நானும் அப்படியே செய்ய வேண்டுமா என்ன?

நடிப்பில் மற்ற நடிகைகளுடன் என்னை ஒப்பிட்டு பேசுவது பிடிக்காது. எனக்கு வரும் பட வாய்ப்புகளில் எது சிறந்த கதை என்று தோன்றுகிறதோ அதை தேர்வு செய்வேன்.

எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவீர்களா? என்று கேட்கிறார்கள். எனக்கு அரசியல் தெரியாது. அரசியலுக்கு வரும் எண்ணமும் இல்லை. இப்போது எனது கவனம் முழுவதும் சினிமாவில்தான் உள்ளது.” என்றார் காஜல்.