”அமைச்சுப் பதவியை துறக்குமாறு ஜனாதிபதி,  பிரதமர் ஆகியோர் கோரிக்கை விடுத்தால் அதை செய்வதற்கு தயாராகவே இருக்கின்றேன்.” என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய முன்னணி அரசின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதன்போது தனக்கு எதிராக கூட்டு எதிரணியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அமைச்சர் நிராகரித்தார்.

அத்துடன், ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள் சிலர் முன்வைக்கும் கருத்துகள் கவலையளிப்பதாகவும் கூறினார்.

” எனக்கு பதவி முக்கியமில்லை. கூட்டு எதிரணியின் அரசியலுக்கு அஞ்சி பதவி விலகினால் அது வேறுகோணங்களில் கதைகளை உருவாக்கிவிடும். எனவேஇ ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் அறிவித்தால் அமைச்சுப் பதவியை துறந்து,  நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிப்பக்கம்  அமர்வதற்கு நான் தயார்.” என்றும் கூறியுள்ளார் ரிஷாட்.