இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவந்தவர்களில் மேலும் 23 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்.

இதன்படி கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 366 ஆக அதிகரித்துள்ளது. இதில் ஒரு சீனப்பெண்ணும் உள்ளடங்குகின்றார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 869 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவுவெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 494பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.