கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கான பொலிஸ் ஊரடங்குச்சட்டம் மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஏனைய 19 மாவட்டங்களுக்கான ஊரடங்குச்சட்டம் இன்று (01.04.2020) பிற்பகல் 2 மணிக்கு அமுல்படுத்தப்பட்டு ஏப்ரல் 6 ஆம் திகதி காலை 6 மணிவரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி ஏப்ரல் 6 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச்சட்டம் அன்று மதியம் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்தும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கும் தரப்புக்கு அனுமதி வழங்கப்படும்.

அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்காக வழங்கப்பட்டுள்ள நடைமுறையை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் அடுலுகம மற்றும் கண்டி மாவட்டத்தின் அக்குறணை ஆகிய பகுதிகள் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்விரு பகுதிகளுக்கும் செல்வது தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை உரிய வகையில் பின்பற்றுமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுளள்து.