உலக நாடுகள் முழுவதையும் உலுக்கி எடுத்துவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 365 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவியுள்ளது.

இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

உலகம் முழுவதும் இதுவரை 5 இலட்சத்து 97 ஆயிரத்து 256  பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 27 ஆயிரத்து 356 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 4 இலட்சத்து 22 ஆயிரத்து 698 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு இலட்சத்து 33  ஆயிரத்து 363 பேர் குணமடைந்துள்ளனர்.

பலி எண்ணிக்கை 1000 ஐ தாண்டிய நாடுகள்…

இத்தாலி – 9,134

ஸ்பெயின் – 5,138

சீனா – 3,295

ஈரான் -2,378

பிரான்ஸ் -1,995

அமெரிக்கா – 1,701

அதேவேளை, அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 25 ஆக உயர்வடைந்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 106 ஆகும். நேற்றைய தினம் எவரும் அடையாளம் காணப்படவில்லை. அறுவர் குணமடைந்துள்ளனர். 238 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.