கொழும்பு உட்பட  8 மாவட்டங்களில் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச்சட்டம் பிற்பகல் 2 மணிமுதல் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

காலை 6 மணிக்கு நீக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்குச்சட்டம் நண்பகல் 12 மணிக்கு மீண்டும் அமுலுக்கு வரும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், மக்கள் நலன்கருதி மேலும் இரண்டு மணிநேரம் நீடிக்கப்பட்டுள்ளது.

இக்காலப்பகுதியில் மக்கள் பொறுப்புடனும், பொதுநலன்கருதியும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி செயற்பட வேண்டும் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

வடக்கு மாகாணத்துக்கும் கொழும்பு, கம்பஹா, புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கும்  இன்று பிற்பகல் 2  மணி முதல் 27 ஆம் திகதி காலை 6 மணிவரை மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

27 ஆம் திகதி  காலை 6 மணிக்கு ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டாலும் நண்பகல் 12 மணி முதல் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, நாட்டின் ஏனைய 17 மாவட்டங்களிலும் தற்போது அமுலில் இருக்கும்  ஊரடங்குச்சட்டம்  26 ஆம் திகதி காலை 6 மணிவரை  அமுலில் இருக்கும் .

இதன்படி 26 ஆம் திகதி காலை ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டு மதியம் 12 மணி முதல் மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை மீண்டும் அமுல்படுத்தப்படும்.

அத்துடன், மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கும் முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.