ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கட்சி உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
கட்சி தலைவரின் கட்டளையின் பிரகாரமே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும்,  இதற்கு கட்சியின் செயற்குழுவும் அங்கீகாரம் வழங்கும் என்றும் ஐ.தே.கவின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
நீதிபதிகள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு அழுத்தம் பிரயோகித்தமை, பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையிலான தொலைபேசி உரையாடல் உட்பட ரஞ்சனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மேலும் சில முறைப்பாட்டுகளை அடிப்படையாகக்கொண்டே அவரை கட்சியிலிருந்து இடைநிறுத்தும் முடிவு எடுக்கப்பட்டது எனவும் அகிலவிராஜ்  கூறினார்.