யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் 17 ஆம் திகதி உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.

காலை 10 மணிக்கு இடம்பெறும் இந்த நிகழ்வின் போது சென்னையிலிருந்து முதலாவது விமானம் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு வரவுள்ளது.

இதில் இந்திய சிவில் விமான சேவை அதிகாரிகளின் குழுவினர் வரவிருப்பதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் அதிகாரி தெரிவித்தார்.

பலாலி விமானம் திறக்கப்பட்டபின்னர் எதிர்வரும் 27 ஆம்திகதி முதல் வழமையான விமான சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

-அரச தகவல் திணைக்கள இணையத்தளம் –