தெற்கு, மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ் அடுத்த வாரம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

ஓகஸ்ட் 6ஆம் திகதி தொடங்கம் 16ஆம் திகதி வரை அவர் பாகிஸ்தான், இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் பயணம் மேற்கொள்கிறார் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது, பாகிஸ்தானில் பயணம் மேற்கொண்டுள்ள அலிஸ் வெல்ஸ், அடுத்த வார தொடக்கத்தில், இலங்கைக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மூன்று நாடுகளுக்கான பயணங்களின் போது, பரஸ்பர நலன்கள் தொடர்பாக மூத்த அரசாங்க அதிகாரிகளுடன் இருதரப்பு பேச்சுக்களை நடத்தவுள்ள அவர், வணிகத் தலைவர்களையும், சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.