உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நாளை (09) நடைபெறும் முதலாவது அரைஇறுதிப்போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

11ஆம் திகதி நடைபெறும் 2ஆவது அரைஇறுதியில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் சந்திக்கின்றன.

12ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி கடந்த மே மாதம் 30ஆம் திகதி தேத இங்கிலாந்தில் தொடங்கியது. வருகிற 14ஆம் திகதிவரை நடைபெறும் இந்த போட்டியில் 10 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதின.

லீக் ஆட்டம் முடிவில் இந்தியா (15 புள்ளிகள்), ஆஸ்திரேலியா (14 புள்ளிகள்), இங்கிலாந்து (12 புள்ளிகள்), நியூசிலாந்து (11 புள்ளிகள்) ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.

முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த விராட்கோலி தலைமையிலான இந்திய அணி, 4-வது இடம் பெற்ற கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

மான்செஸ்டரில் நடைபெறும் இந்த ஆட்டம் பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.

பர்மிங்காமில் 11ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் 2-வது அரைஇறுதி ஆட்டத்தில்

புள்ளி பட்டியலில் 2-வது இடம் பிடித்த ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, 3-வது இடம் பெற்ற இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியை சந்திக்கிறது.