உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற 39 லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி 3ஆவது வெற்றியை பெற்றது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற மே.தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அணித் தலைவர் கருணாரட்ன, குசல் பெரேரா ஆகியோர் களம் இறங்கினார்கள்.

கருணாரத்ன நிதானமாக ஆட மறுமுனையில் குசல் பெரேரா அடித்து ஆடினார்.

அணியின் ஓட்ட எண்ணிக்கை 93 ஓட்டங்களாக உயர்ந்த போது கருணாரட்ன (32 ஓட்டங்கள்) ஜாசன் ஹோல்டர் பந்து வீச்சில் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த அவிஷ்கா பெர்னாண்டோ அருமையாக ஆடினார். 17.3 ஓவர்களில் இலங்கை அணி 100 ஓட்டங்களை எட்டியது.

அடித்து ஆடிய குசல் பெரேரா 51 பந்துகளில் 8 பவுண்டரியுடன் 64 ஓட்டங்களை எடுத்த நிலையில் ‘ரன்-அவுட்’ ஆகி வெளியேறினார்.

அடுத்து களம் கண்ட குசல் மென்டிஸ் 39 ஓட்டங்களும் , மேத்யூஸ் 26 ஓட்டங்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். நிலைத்து நின்று ஆடிய அவிஷ்கா பெர்னாண்டோ 100 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார்.

ஒரு நாள் போட்டியில் அவர் அடித்த முதல் சதம் இதுவாகும்.

45.3 ஓவர்களில் அந்த அணி 300 ஓட்டங்களை கடந்தது. அணியின் ஓட்ட எண்ணிக்கை 47.2 ஓவர்களில் 314 ஓட்டங்கள் எட்டிய போது அவிஷ்கா பெர்னாண்டோ

(104 ஓட்டங்கள், 103 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) ஷெல்டர் காட்ரெல் பந்து வீச்சில் பாபியன் ஆலெனிடம் பிடி கொடுத்து பெவிலியன் திரும்பினார். அ

டுத்து வந்த இசுரு உதனா (3 ரன்) வந்த வேகத்தில் நடையை கட்டினார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 338 ஓட்டங்களைக் குவித்தது.

பின்னர் இமாலய இலக்கை நோக்கி ஆடிய மே. தீவுகள் அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தாலும், 5ஆவது வீரராக களம் கண்ட நிகோலஸ் பூரன் நிலைத்து நின்று அடித்து ஆடி இலங்கை அணிக்கு அச்சுறுத்தலாக விளங்கினார்.

அவருக்கு பக்கபலமாக இருந்த பாபியன் ஆலென் 51 ஓட்டங்களுடன் ரன்-அவுட் ஆனார்.

அடுத்து முதல் சதம் அடித்து மிரட்டிய நிகோலஸ் பூரன் (118 ஓட்டங்கள், 103 பந்து, 11 பவுண்டரி, 4 சிக்சர்) மேத்யூஸ் பந்து வீச்சில் குசல் பெரேராவிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார். அத்துடன் மே. தீவுகள் அணியின் நம்பிக்கை தகர்ந்தது.

அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 315 ஓட்டங்களையே அவ்வணி எடுத்தது. இதனால் இலங்கை அணி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தனது 3-வது வெற்றியை ருசித்தது